லோக் அதாலத்தில் 1,387 வழக்குகளுக்கு தீர்வு

சிவகங்கை, டிச.15: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் ஆயிரத்து 387 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 14மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதில் 299குற்றவியல் வழக்குகள், 222 செக்மோசடி வழக்குகள், 237 வங்கிக்கடன் வழக்கு, 291 வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, 251குடும்ப பிரச்னை வழக்கு, 887 சிவில் வழக்கு, ஆயிரத்து 118 மற்ற குற்ற வழக்குகள் என மொத்தம் 3ஆயிரத்து 305வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன. இதில் ஆயிரத்து 234 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் ரூ.14 கோடியே 97லட்சத்து 15 ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 153 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.3 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரம் வங்கிகளுக்கு வரவானது. சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி, மாவட்ட கூடுதல் நீதிபதி பார்த்தசாரதி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.

 

Related Stories: