விளையாட்டு போட்டிகள்

தேவகோட்டை, ஜன.4: தேவகோட்டை சிதம்பரநாதபுரம் பகுதி மக்கள் 2019 ஆங்கிலப் புத்தாண்டை குதூகலமாக கொண்டாடினர். புத்தாண்டு தினத்தன்று சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கற்கள் சேகரிப்பு, ஸ்லோ சைக்கிள் ரேஸ், பலூன் உடைத்தல், லெமன் அன் ஸ்பூன், பந்துடன் ஓட்ட, பன் சாப்பிடுதல், ஓட்டப்பந்தயம், செங்கல் நடை, பந்து பரிமாற்றுதல், சொல் கேட்டு ஓவியம் வரைதல், கயிறு இழுத்தல், ரொட்டி உண்ணுதல், கோலப்போட்டி, உறியடி, லக்கி கார்னர் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒரு நாள் முழுவதும் நடைபெற்றன. பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு சிவகங்கை மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமநாதன் தலைமை வகித்தார். தெய்வசிகாமணி, சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். தனசேகரன் வரவேற்றார். இலக்கியமேகம் சீனிவாசன் பெரியவர்கள் சிறியவர்களை எப்படி வழி நடத்தவேண்டும். குழந்தைகள் எப்படி வாழக்கற்றுக்கொள்ளவேண்டும் என்று கதை சொல்லி சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இளைஞர்களின் நடனநிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிகளை பானுமதி தொகுத்து வழங்கினார். கார்கோ பாய்ஸ் குழுவினர் கார்த்திகேயன், அருண், கோவிந்தராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Related Stories: