திருத்துறைப்பூண்டி பகுதியில் கிராமங்களுக்கு விரைந்து மின்சாரம் வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, டிச.20:   கஜாபுயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி பகுதியில் விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரமற்றும் கிராமபகுதிகளில் கஜா புயலால் பெரும் பாதிப்பைஏற்படுத்தியது.அப்போது 136 முகாம்களில் 1,42,223 பேர் தங்கியிருந்தனர்.கஜா புயலில் 29 பேர் இறந்துள்ளனர். 122 மாடுகள், 736 ஆடுகள், 41 கன்றுகள், 233 கோழிகள்உள்ளிட்ட கால்நடைகள்இறந்துள்ளது.  50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டு வீடு மற்றும் கூரைவீடுகள், தொகுப்பு வீடுகள், மாடி வீடுகள், அரசு அலுவலகங்கள்  சேதமடைந்தன. ஒன்றியநகரபகுதிகள் முழுவதும் மின்கம்பங்கள்

 முற்றிலும் சேதமடைந்தன.

நகரபகுதியில் புதிய மின்கம்பங்கள்அமைத்து 15 தினங்களுக்கு பிறகு மின்சாரம் கொடுக்கப்பட்டபோதிலும் அடிக்கடி மின் தடைஏற்பட்டு வருகிறது. சாலையோர கிராமங்கள்பலஇடங்களில் புதிய மின் கம்பங்கள்அமைத்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமபகுதிகளை பொறுத்தவரை மின்சாரம் வழங்கப்பட்டகிராமங்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் மின்சாரம் வழங்கப்படுகிறது.கிராமங்களுக்கு இன்னும் குடிநீர் டேங்கர் லாரிமூலம்தான் வழங்கப்பட்டு வருகிறது.அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்தாலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் வழங்குவதற்கு காலதாமதாகும் காரணம் பைப்லைனில் மரங்கள் விழுந்து சேதமடைந்துள்ளது. இதனைஉடனடியாக சரிசெய்திட வேண்டும்.கிராமங்களில் புதிய மின்கம்பங்கள்அமைத்து மின் கம்பிகள் இழுக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகளை கூடுதல் பணியாளர்களை கொண்டு விரைந்து முடித்து மின்சாரம்  வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: