புயல் கரையை கடந்து 26 நாட்களாகியும் 30% மட்டுமே மின் விநியோகம் இருளில் தத்தளிக்கும் கிராமங்கள்

சேதுபாவாசத்திரம், டிச.12: கஜா புயல் கரையை கடந்து 26 நாட்களாகியும் 30 சதவீதம் மட்டுமே மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பல கிராமங்களில் இருளில் மூழ்கி தத்தளிக்கிறது.கஜா புயலின் கோரதாண்டவத்தால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதிகளில் அதிகளவில் சேதம் ஏற்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் முற்றிலும் மின்தடை ஏற்பட்டது.இதையடுத்து கடந்த 26 நாட்களாக இரவு, பகல் பாராமல் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய பணியாளர்கள் வேலை பார்த்தும் இதுவரை பேராவூரணி, பெருமகளூர், பூக்கொல்லை, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடைவீதிகளுக்கும், நாடியம், துறையூர் போன்ற ஒருசில குக்கிராமங்களுக்கு மட்டுமே மின் விநியோகம் கிடைத்துள்ளது.

பல்வேறு கிராமங்கள் இன்னும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே தத்தளித்து வருகிறது. மின்சாரம் இன்று மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. ஜெனரேட்டர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சேதுபாவாசத்திரம் பகுதியில் 30 சதவீத மட்டுமே மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி வேரோடு சாய்ந்த தென்னை மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை இதனால் தென்னம் பாலைகளில் தற்போது பெய்த மழைநீர் தேங்கி ஏடிஎஸ் கொசு உற்பத்தி அதிகமாகியுள்ளது.மேலும் டெங்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Related Stories: