அண்ணாமலை பல்கலையில் 2 நாள் தேசிய கருத்தரங்கம்

சிதம்பரம், டிச. 12:   அண்ணாமலை பல்கலைக்

கழக பொறியியல் புலத்தில் ‘காற்றாலை மின்சக்தி இயக்கம் மற்றும் கட்டுப்பாடுகளில் உள்ள நவீன முறைகள்’ என்னும் தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம், சென்னை வெஸ்டாஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கை பொறியியல் புல முதல்வர் கிருஷ்ணமோகன் தொடங்கி வைத்து, ‘தொழிற்சாலை மற்றும் கல்லூரிகளை ஒருங்கிணைத்து நடத்தும் திட்டங்களை அதிகமான முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னை வெஸ்டாஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன பொறியாளர் கண்ணன் ராஜேந்திரன் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.

இரண்டு நாள் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு சென்னை வெஸ்டாஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன பொறியாளர் கண்ணன் ராஜேந்திரன், கோபி துரைராஜ் மற்றும் என்லைட்டடு எனர்ஜி பொறியாளர் அருண்குமார் ஆகியோர் காற்றாலை மின்சக்திகள் என்னும் தலைப்பில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து உரையாற்றினர்.கருத்தரங்கிற்கான ஏற்பாட்டை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மைய இயக்குனர் ராமசாமி தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் முகமது தமீம் அன்சாரி, சிகப்பி மற்றும் வெஸ்டாஸ் நிறுவனத்தின் தீபக் ஆகியோர் செய்திருந்தனர்.       

Related Stories: