அம்மா உணவக கழிவு நீரால் துர்நாற்றம் பொது மக்கள் கடும் அவதி

அரியலூர்,டிச.7: அரியலூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இங்கு தினமும் நூற்றுக் கணக்கானோர் வந்து உணவு சாப்பிடுகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரமின்றி காணப்படும் இந்த உணவகத்தில் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளும், பொது மக்களும் முகத்தை பொத்திக் கொண்டு செல்லும் அவல நிலையில் உள்ளது. அம்மா உணவகத்தின் முன்புறமும் சாக்கடை போல் நீர் தேங்கி துற்நாற்றம் வீசுகிறது. அது போல் உணவகத்தின் கழிவுநீர் தேங்கி குளம்

காட்சி யளிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவுவதால் மாவட்ட நிர்வாகம் ஆங்கே ஆங்கே தூய் மையை பற்றி பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் அரியலூர் நகரில் அமைந்துள்ள பொது மக்கள் பயன் பாட்டில் உள்ள பேருந்து நிலையத்ததை கண்டு கொள்ளாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உணவகத்தை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் பயணம் செய்ய ஆவணம் செய்ய பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories: