பொன்னமராவதியில் உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் பிடிஓவிடம் மனு

பொன்னமராவதி, நவ.28: 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்க வலியுறுத்தி உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கத்தினர் பொன்னமராவதி பிடிஓவிடம் மனு அளித்தனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும் 7வது ஊதியக்குழு நிலுவை தொகைகளையும், ஊதிய உயர்வுகளையும் உடன் வழங்கிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாநில தலைவர் சண்முகம், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: