திருமயம், அரிமளம் பகுதியில் ஆசையாக வளர்த்த மரங்கள் கண்ணெதிரே கருகும் அவலம்

திருமயம், நவ.23: திருமயம், அரிமளம் பகுதியில் ஆசையாய் வளர்த்த மரங்கள் கண்ணெதிரே கருகுவதை பார்த்து அப்பகுதி மக்கள் வேதனையடைந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வாரம் வீசிய கஜா புயல் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள ஒருமரத்தை கூட விட்டுவைக்கவில்லை. மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 400க்கும் மேற்பட்ட கால்நடைகள், நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய பயிர்களும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் வேதனையடைந்து வருகின்றனர். இதனிடையே தற்போது அரிமளம், தள்ளாம்பட்டி, திருமயம் துணை மின் நிலையங்களில் இருந்து ஒருசில பகுதிகளுக்கு மட்டுமே மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இதுவரை மின்சாரமின்றி இருட்டில் தத்தளிக்கிறது. மின்சாரமின்றி குழந்தைகள், முதியோர்கள், இல்லத்தரசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மக்களுக்கு விரைந்து மின்சாரம் வழங்க மின் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் பெரும்பாலான மின்கம்பங்கள் சிதைந்து போனதால் புதியமின் கம்பம் நட்டுமின் இணைப்பு வழங்கும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிராம மக்கள் மின்சாரத்தை பார்த்து 7 நாட்கள் ஆனதால் அன்றாட வாழ்கையை நடத்த சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே புயல் வந்துஒருவாரம் ஆனநிலையில் புயலில் சாய்ந்த கொய்யா, மா, பலா, தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் கண்ணெதிரே கருகுவதை கண்ட பொதுமக்கள் வேதனையடைந்து வருகின்றனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி அரிமளம், திருமயம் பகுதியில் உள்ளஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் விழுந்த மரங்களை தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த பெண்கள் அகற்றிய நிலையில், கட்டிடத்தின்  உறுதிதன்மையை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது. மேலும் திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள மேல்நிலைபள்ளிகளில் இன்றளவும் பள்ளி வளாகத்தில்  விழுந்துகிடக்கும் மின் கம்பிகள், மின்கம்பங்கள், மழைநீர், மரங்கள் அகற்றபடவில்லை.  மின் இணைப்பு தண்ணீர்வசதி இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் குடிக்க, கழிவறையை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Related Stories: