பில்லூர்-3 திட்டப்பணி அதிகாரிகள் ஆலோசனை

கோவை, நவ.21: கோவை மாநகராட்சி சார்பில் குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து பில்லூர்-3 குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 162 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,011 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில் உள்ள 9 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நிலம் கையப்படுத்த சர்வே பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் உள்ள 37 ஏக்கர் புறம்போக்கு இடம் மாநகராட்சி நிர்வாகத்தின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

 பில்லூர்-3 திட்டப்பணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில் பில்லூர்-3 திட்டப்பணியின் தற்போதைய நிலவரம், நிலம் கையகப்படுத்தும் விவகாரம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் துணை கமிஷனர் காந்திமதி, மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் துணைத்தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், பில்லூர் -3 திட்டப்பணி மேற்கொள்ளப்பட உள்ள இடங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: