சேந்தமங்கலம் வட்டாரத்தில் நெல் சாகுபடியாளர்கள் காப்பீடு செய்ய அழைப்பு 30ம் தேதி கடைசி

சேந்தமங்கலம்,  நவ.21: சேந்தமங்கலம் வட்டாரத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், காப்பீடு  செய்து பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  சேந்தமங்கலம் வேளாண் உதவி இயக்குனர் ஹேமலதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:  சேந்தமங்கலம் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில்,  காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. சம்பா பட்ட நெல் சாகுபடிக்கு பிரீமியம்  செலுத்த வரும் 30ம் தேதி இறுதி நாள் ஆகும். எனவே, அறிவிக்கை செய்யப்பட்ட  கிராமங்களான நடுக்கோம்பை, காளப்பநாயக்கன்பட்டி, துத்திக்குளம்,  திருமலைகிரி, வாழவந்திக்கோம்பை, அக்கியம்பட்டி, பொன்னர்குளம் பிட்-1,  பொன்னர்குளம் பிட்-2 மற்றும் பொம்மசமுத்திரம் ஆகிய கிராமங்களில் நெல்  பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 435 பிரீமிய தொகையினை அருகில்  உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்கள்  மற்றும் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் செலுத்தி காப்பீடு  செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, சேந்தமங்கலம் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: