முத்துப்பேட்டை முகாமில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

முத்துப்பேட்டை, நவ. 20:  திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் முத்துப்பேட்டையில் 100 சதவீதம் இடங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் அரசின் முதன்மைச்செயலர் அமுதாஆய்வு செய்தார்இதில் முத்துப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி முகாமிற்கு சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 66 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறி அம்மையத்தில் உள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் அவர்களின் கோரிக்கையின்படி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தார்.மேலும் மாங்குடி மருதவனம், எழிலூர், முத்துப்பேட்டை நகர் போன்ற பகுதிகளில் கஜா புயலினால் விழுந்த மரங்களை பேரிடர் மீட்பு குழுவிற்கு உத்தரவிட்டு ,அப்புறப்படுத்தப்பட்டது.  மேலும் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள், மரங்களை பார்வையிட்டு உடனடியாக அகற்றி  சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

Related Stories: