உடன்குடி அருகே அடிப்படை வசதியற்ற லட்சுமிபுரம் கிராமம் மக்கள் அவதி

உடன்குடி, நவ. 16:     உடன்குடி அருகே அடிப்படை வசதியற்ற லட்சுமிபுரம் ஊராட்சி கிராம பகுதியில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

 உடன்குடி ஒன்றியம், லட்சுமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்காடு கிராமங்களில் அடிப்படை வசதி முறையாக செய்துதரப்படவில்லை. பல வாரங்களாக குப்பை கழிவுகள் சுத்தம் செய்யபடாததால் சுகாதாரசீர்கேடு நிலவுகிறது. அத்துடன் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. தெரு விளக்குகள் இரவுநேரத்தில் எரிவதே இல்லை. இவ்வாறு இங்கு நிலவும் குறைபாடுகள் குறித்து  ஊராட்சி செயலாளரிடம் பல முறை புகார் கொடுத்தும் அதை அவர் கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் உள்ள மக்கள் தெருக்களிலுள்ள குடிநீர் சின்டெக்ஸ் டேங்குகள், மற்றும் குடிநீர்தொட்டிகளை சுத்தப்படுத்த வேண்டும், குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகழிவுகளையும் சுத்தபடுத்தி தருமாறும் புகார் கூறிய போதும்  நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிடிஓவிடம் புகார் அளித்தும் பலனில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வேப்பங்காடு ஊர் மக்கள் பென்சிகர் என்பவர் தலைமையில் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: