பிளஸ் 2 மாணவர்களுக்கு 2129 இலவச லேப்-டாப்

கோவை,நவ.16: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2,129 மடிக்கணினிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும் ேபசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம் தற்போது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 கோவை மாவட்டத்தில் உள்ளி பள்ளிகளுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இலவச ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்க உள்ளோம். படித்து முடித்த இளைஞர்கள் பணிக்கான நேர்காணலுக்குச் செல்லும் போது அங்கு சிறப்பாக செயல்படுவதில்லை. இதற்காக கோச்சிங் சென்டர்கள் அமைக்கப்பட உள்ளது. மாணவர்கள் சிறப்பாக படித்து அரசு அதிகாரிகளாக வேண்டும் என்பதற்காக இவற்றை செய்து வருகிறோம் என்றார். விழாவில் கோவை மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: