மயிலாடுதுறை அருகே அழைக்காமல் நடந்த நாரத வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணி: விசாரணை ேதவை ஊர்மக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை, நவ.15:  மயிலாடுதுறை அருகே கடலங்குடி நாரத வரதராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பொதுமக்களுக்குத் தெரிவிக்காமல் நடைபெற்ற கும்பாபிஷேகப் பணிகள் குறித்து விசாரணை தேவை என ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள கடலங்குடி நாரதவரதராஜப்பெருமாள் ஆலயத்திற்கு 200 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கு தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தது. பழம்பெரும் ஆலையம் என்பதால் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்து நாரதவரதராஜப்பெருமாள் கோபுர கலசத்திற்கு புனித நீராட்டுதலைக் கண்டு வணங்கி சென்றனர்.

கும்பாபிஷேகத்தின்போது ஊர் மக்கள் ஒன்று திரண்டு அந்த ஆலையத்தின் பல்வேறு வேலைகளை ஊர் மக்கள் தங்கள் சொந்த செலவில் செய்து வந்துள்ள நிலையில் கும்பாபிஷேகத்திற்கு ஊர்மக்களை அழைக்காமல் பட்டாச்சாரியாரையும் கும்பகோணத்திலிருந்து அழைத்து வந்து கும்பாபிஷேகம் செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அரசு அளித்த ரூ.60 லட்சம் நிதியை முறையாக செலவு செய்யப்படவில்லை என்றும் பொதுமக்கள் செய்த வேலையையும் அவர்கள் செய்த வேலையாகக் காட்டியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் ஒருசில வருடங்களுக்கு முன்பு இந்த ஆலையத்தில் 4 சிலைகள் திருடு போயுள்ளது. இது குறித்தும் விசாரணை செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கோயில் செயல் அலுவலர் ஆசைத்தம்பியை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

Related Stories: