இளம்பிள்ளை அருகே ஏரியில் இறைச்சி கழிவு கொட்டினால் அபராதம்

இளம்பிள்ளை, நவ.8:  இளம்பிள்ளை அருகே ஏரியில் இறைச்சி கழிவு கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என ேபரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இளம்பிள்ளை அருகேயுள்ள காடையாம்பட்டி ஏரி மற்றும் நீர்நிலைகளில், இறைச்சி கடைகளின் கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இறைச்சி கடைகளின் கழிவு பொருட்களை ஏரி மற்றும் நீர்நிலை பகுதிகளிலும், பொது இடங்களிலும் கொட்டக்கூடாது. அவ்வாறு மீறி கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இடங்கணசாலை ேபரூராட்சி செயல் அலுவலர் ராஜ விஜயகணேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக,  இடங்கணசாலை ேபரூராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: