கறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம்

கறம்பக்குடி, நவ.1:  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யில் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் எவரெஸ்ட் உணவக மாடியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கவுரவ தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல்கரீம்,  ஹஜ்முகம்மது , இருதயராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சங்க தலைவர் சாந்தியமூர்த்தி, செயலாளர் அய்யப்பன், பொருளாளர் சரவணன் ஆகியோர்களின் பதவியேற்பு விழாவை நவம்பர் மாதத்தில் நடத்துவது, விழாவிற்கு மாவட்ட வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள், பள்ளி கட்டிட குழு தலைவர் விஜயரவி பல்லவராயர் மற்றும் கவிஞர் தங்கம்மூர்த்தி மற்றும் பிற பகுதிகளில் உள்ள சங்க உறுப்பினர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் இணை செயலாளர்கள் சிவா, அப்துல் ரசாக், செய்தி தொடர்பாளர் புலவர் ரகமத்துல்லா,  செயற்குழு உறுப்பினர்கள்  ஜோதிமணி , பகர்தீன் இளைய மனோகரன் ஜவருல்லா, அப்துல்லா, பரமசிவம், சதீஷ்குமார், காந்தி, ஜாகிர் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: