மண்டல கால்பந்து போட்டி பள்ளப்பட்டி அரசு பள்ளி சாம்பியன்

அரவக்குறிச்சி, அக்.23: அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கால்பந்து அணியினர்   பெரம்பலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில்   முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மண்டல அளவில்  கால்பந்து போட்டி  பெரம்பலூரில் நடைபெற்றது.  இதில் கரூர் மாவட்டம்  அரவக்குறிச்சி அடுத்த  பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முதல் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி பெரம்பலூர் அணியை 5:3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர்.  இறுதிப் போட்டியில் உடையார் பாளையம் டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியை 2:0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று மாநில போட்டிக்குத் தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற கால்பந்து அணியினரை தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள்  மற்றும் பள்ளபட்டி எஜூகேஷன் சொசைட்டி செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பாராட்டி, வாழ்த்தினர்.

Related Stories: