பெரம்பலூருக்கு மருத்துவ கல்லூரி வருவது உறுதி: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

 

பெரம்பலூர், ஜூன் 5: பெரம்பலூருக்கு மருத்துவக் கல்லூரி வருவது உறுதியாகி விட்டது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு, பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண்நேரு வெற்றி பெற்ற சான்றிதழ் பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் நிருபர் களிடம் கூறுகையில், தமிகத்தில் 40க்கும் 40 என்ற ரீதியில் திமுக கூட்ட ணிக்கு வாக்களித்த அனைவருக்கும் தமிழக முதல்வரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல பெரம்பலூரில் அமோக வெற்றியை கொடுத்துள்ளார்கள். அதற்கும் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெரம்பலூருக்கு மருத்துவக் கல்லூரி வருவது உறுதியாகி விட்டது. இடம் பார்த்து தேர்வு செய்து விட்டால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். பெரம்பலூருக்கு ரயில்வே திட்டம், மற்ற திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்து நீலகிரி எம்பி ராசாவுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post பெரம்பலூருக்கு மருத்துவ கல்லூரி வருவது உறுதி: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: