பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல் தினவிழாவில் வலியுறுத்தல் ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

ஜெயங்கொண்டம், ஜூன் 6: ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெரியநாயகி சமேத  கழுமலைநாதர் திருக்கோயிலில் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு காலை 6:15 க்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுமாலை 6 மணிக்கும் விஷேச தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தின் போது திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து ஆராதனை நடைபெற்றது. பின்னர் மலர்களால் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

The post பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல் தினவிழாவில் வலியுறுத்தல் ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: