திருமாந்துறை ஊராட்சி கீரனூரில் மகாமாரியம்மன் கோயில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

குன்னம், மே26:குன்னம் அருகே தி. கீரனூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை ஊராட்சிக்குட்பட்ட கீரனூர் கிராமத்தில் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி 15-5-24 தொடங்கி பத்து நாட்கள் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு முக்கிய வீதிகளில் வழியாக சுவாமி ஊர்வலம் வந்தது அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட திருத்தேர் வடம் பிடித்து முக்கிய வீதி வழியாக உலா வந்து தேரடியில் நிற்கப்பட்டது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்திருவிழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

The post திருமாந்துறை ஊராட்சி கீரனூரில் மகாமாரியம்மன் கோயில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: