ஜெயங்கொண்டம் அருகே பேருந்தின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

 

ஜெயங்கொண்டம், மே 30:ஜெயங்கொண்டம் அருகே பேருந்தின் முன் சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நரசிங்க பாளையம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் அருமை ராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் பிரேம்குமார் (21) டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கும் இவருக்கும் மன வருத்தம் இருந்ததாகவும், இதனால் அந்த பெண் பிரேம்குமாரிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊருக்கு செல்வதற்காக அந்தப் பெண் பஸ் நிலையத்தில் காத்திருந்ததாகவும் அப்போது அங்கு வந்த பிரேம்குமார் அவ்வழியாக காட்டுமன்னார்குடியில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் நரசிங்கபாளையம் காலனி பஸ் நிறுத்தத்தை நெருங்கி வரும் நேரததிதில் சாலையில் பெட்ரோல் குண்டை வீசி உள்ளார்.

அப்போது பெட்ரோல் குண்டு வெடித்து எரிந்ததை பார்த்த பேருந்து ஓட்டுனர் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி விட்டார். இதனைப் பார்த்த பிரேம்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவல் அறிந்த மீன்சுருட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து பெட்ரோல் குண்டு வீசிய பிரேம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post ஜெயங்கொண்டம் அருகே பேருந்தின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: