இச்சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நிலவியது

விருத்தாசலம், அக். 17: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஸ்டேட் பேங்க் அருகில் ஜனநாயக கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டதிற்கு மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் ராமர், வயலூர்சுரேஷ், மாநிலக்குழு உறுப்பினர் குப்புசாமி, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் பரமகுரு, பஞ்சமூர்த்தி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் ஏ.சித்தூர் ஆரூரான் சர்க்கரை நிர்வாகம் விவசாயிகளுக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு பணம் தருவதாக விவசாயிகளை ஏமாற்றி பல ஆவணங்களில் கையொப்பம் பெற்று அவற்றை கருவேப்பிலங்குறிச்சி மற்றும் கழுதூர் ஸ்டேட் வங்கிகளில் கொடுத்து விவசாயிகள் பெயரில் முத்ரா திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். அத்தொகையை விவசாயிகளே செலுத்தவேண்டும் என்று சம்பந்தப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வசூலிக்க முற்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: