திருச்செங்கோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்செங்கோடு, அக்.11: திருச்செங்கோட்டில், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது.

திருச்செங்கோட்டில், கடந்த சில நாட்களாக போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தன. சாலையோரத்தில் பழக்கடை, தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். வடக்கு ரத வீதியில், பொக்லைன் மூலம் பழக்கடை,

தள்ளுவண்டி கடைகள் பலவற்றை இடித்து அகற்றினர். பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை, நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, ஆர்டிஓ பாஸ்கரன், டிஎஸ்பி சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டர். ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: