சிவகங்கை அருகே ஆக்கிரமிக்கப்பட்ட ₹15 கோடி அரசு நிலம் மீட்பு வருவாய்த்துறையினர் அதிரடி

சிவகங்கை, அக். 11: சிவகங்கை அருகே ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

சிவகங்கை அருகே மேலவாணியன்குடி கிராமம் மானாமதுரை சாலையோர பகுதியில் சுமார் 6 ஏக்கர் அரசு நீர்பிடிப்பு புறம்போக்கு நிலம் உள்ளது.  அப்பகுதியை சேர்ந்த சிலர், இந்ந நிலத்தில் குடிசைகள் மற்றும் காம்பவுன்ட் சுவர் அமைத்து பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராமமக்கள் கலெக்டர், வருவாய்த்துறையினரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தனர்.இந்நிலையில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த அரசு நிலத்தை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று காலை சிவகங்கை தாசில்தார் ராஜா, ஆர்ஐ கல்யாண்குமார், விஏஓ சுரேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: