இலுப்பக்குடியில் போலீசார் துணையுடன் ஊரணி ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு

சிவகங்கை, அக். 9:  இலுப்பக்குடியில் குடிநீர் ஊரணியை தனியார் ஆக்கிரமிப்பிப்பதாகவும் அதற்கு போலீசார் துணை போவதாகவும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி இலுப்பக்குடி கிராமத்தினர் அளித்துள்ள மனு: ‘‘இலுப்பக்குடி கிராமத்திற்கு சொந்தமான குடிநீர் ஊரணியும், அதைச்சார்ந்த இடமும் அரசுக்கு சொந்தமானதாகும். இதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தனியார் சிலர் ஊரணியை சுற்றிலும் கல்லுக்கால் ஊன்றி வேலி போட்டுள்ளனர். இதற்கு சிவகங்கை டவுன் போலீஸ் எஸ்ஐ ஒருவரும் உடந்தையாய் உள்ளார். இதுகுறித்து கலெக்டர், எஸ்பி, தாசில்தார் ஆகியோரிடம் ஏற்கனவே புகார் மனு அளித்துள்ளோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எங்களை போலீஸ் ஸ்டேசன் அழைத்து சம்பந்தப்பட்ட எஸ்ஐ மிரட்டுகிறார். எனவே ஆறரை ஏக்கர் ஊரணியை தனிநபர்கள் செய்துள்ள போலி பத்திரத்தையும், பட்டாவையும் ரத்து செய்யவும், ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: