மேட்டுப்பாளையம் பேரூராட்சி வார சந்தையில் தொழிலாளர் அதிகாரிகள் ஆய்வு

ெபரம்பலூர்.செப்.26: முசிறி மேட்டுப்பாளையம் பேரூராட்சி வாரச்சந்தையில் தொழிலாளர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.திருச்சி கூடுதல்  தொழிலாளர் ஆணையர்(பொ)  லட்சுமிகாந்தன் அறிவுரையின் படி  திருச்சி  தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் உத்தரவின் படி பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ( அமலாக்கம்)  முகமது யூசுப் தலைமையில் பெரம்பலூர் தொழிலாளர் துணை ஆய்வாளர்  ஜெயராஜ், முசிறி தொழிலாளர் உதவி ஆய்வாளர்  திவாகரன் ஆகியோர் முசிறி மேட்டுப்பாளையம்  பேரூராட்சி வார வெள்ளி சந்தை அன்று  சட்டமுறை எடையளவு சட்டம் 2000ன் கீழ் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இதில் முத்திரையிடப்படாத  எடைகள் மற்றும் அளவைகளை பயன்படுத்திய வணிகர்களிடமிருந்து  தராசுகள் மற்றும் எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முத்திரையிடப்படாத எடைகள் மற்றும் அளவைகளை பயன்படுத்தும் வணிகர்களின்  மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: