பெரம்பலூர், டிச.31: பெரம்பலூர் அருகேயுள்ள மேலப்புலியூர் ஊராட்சி, நாவலூர் கிராமம், இந்திரா காலனித் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் மகன் ராஜாராம்(43). இவர் புதுவிராலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம் இரவு 9: 15 மணியளவில் பெரம்பலூரில் இருந்து நாவலூருக்கு ஆலம்பாடி சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது,கலீபா பள்ளிவாசல் அருகே நிலை தடுமாறி தானே தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டது.
இதனால் அருகிலிருந்தோர் உதவியுடன் பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
