மண் பாதுகாப்பு பயிற்சி வெளி மாநிலத்திற்கு சேலம் விவசாயிகள் பயணம்

ஆட்டையாம்பட்டி, செப்.25:  மண் மற்றும் நீர் மேலாண்மை பாதுகாப்பு பயிற்சிக்காக, வெளி மாநிலத்திற்கு சேலம் விவசாயிகள் பயணம் மேற்கொண்டனர்.

வேளாண்மை துறை சார்பில், சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு நீர் மற்றும் மண் மேலாண்மை பாதுகாப்பு குறித்து வெளி மாநிலத்தில் பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதில் மாவட்டத்தில் உள்ள 20 விவசாயிகள் மண் மற்றும் நீர் மேலாண் பாதுகாப்பு குறித்து வெளி மாநிலமான, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள நீர் மற்றும் மண் மேலாண்மை பயிற்சி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் மூலம் புறப்படும் நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சையத்அன்சர் பாஷா கொடியசைத்து தொடங்கி  வைத்தார். இதில், வேளாண்மை உதவி இயக்குநர் செல்வமணி, வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜேந்திரன், செல்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரஸ்வதி மற்றும் தீபன்முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: