சேலம் சரகத்தில் 4 இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

சேலம், செப்.21: காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேருக்கு காவல் நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக இருந்த ரவீந்திரன், கடந்த மாதம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஸ்ேடசனுக்கு, காத்திருப்போர் பட்டியில் இருந்த இன்ஸ்பெக்டர் குமார் நியமிக்கப் பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஓசூர் ஸ்டேசனுக்கும், அங்கிருந்த பிரகாஷ், சேலம் மாவட்ட கொடுங்குற்றதடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.

Related Stories: