குடிநீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் அட்வைஸ்

சிவகங்கை, செப்.21: தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் திடீரென பெய்து வரும் மழையால் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் பலவித தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நகர் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  சாலைகளில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகி நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட குடிநீரை நன்கு காய்ச்சி பயன்படுத்தவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related Stories: