லாப நோக்கை எதிர்பார்க்காமல் பட்டுக்கோட்டை- காரைக்குடிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்

பட்டுக்கோட்டை, செப். 21:   2012ம் ஆண்டு அகல ரயில் பாதை பணிகளுக்காக நிறுத்தப்பட்ட பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே 75 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் 30ம் தேதி கட்டணத்துடன் கூடிய பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அன்று ஒரு நாள் மட்டும் பயணிகள்  ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு ரயில் சேவை நடக்கவில்லை. பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே தொடர்ந்து ரயில் இயக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகத்திடம் பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம், ரயில் பயணிகள் நலச்சங்கம், ரயில்  பயணிகள் மற்றும் உபயோகிப்பாளர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து எந்தவிதமான முன்னறிவிப்பின்றி  தெற்கு ரயில்வே கடந்த ஜுலை 2ம் தேதி  முதல் மீண்டும் வாரத்தில் 2 நாட்கள் ( திங்கள்,  வியாழக்கிழமை) மட்டும் டெமு ரயில் இயக்கப்படும். காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே 6.30 மணி நேரம் பயணம் என்று அறிவிக்கப்பட்டது. அதிக நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் ரயிலில் அதிகளவில் பயணிகள் செல்லவில்லை. இதனால் பயண நேரத்தை  குறைக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகத்துக்கு பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம், ரயில் பயணிகள் மற்றும் உபயோகிப்பாளர் நலச்சங்கம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் உடனடியாக ஏற்றது. அதன்படி கடந்த ஜூலை 5ம் தேதி முதல் பயண நேரத்தை 3.15 மணி நேரமாக குறைத்தது. அதன்படி அன்று பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு 4.45 மணிக்கு ரயில் சென்றது. இந்நிலையில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இயக்கப்பட்ட டெமு ரயிலும் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதியோடு நிறுத்தப்பட்டது. அதற்கு மெயின்டனன்ஸ் காரணங்களாக இந்த ரயில் தற்காலிமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் நேற்று முதல் வரும் அக்போபர் 1ம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் மீண்டும் ரயில் இயக்கப்படும் என்று நேற்று முன்தினம் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்ட டெமு ரயில் மதியம் 12.45 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் ஜெயராமன் கூறுகையில், தற்போது இந்த டெமு ரயில் மீண்டும் இன்று (நேற்று) முதல் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் 1ம் தேதியோடு நிறுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இது எப்படியென்றால் வரும் ஆனா வராது என்பது போன்று தான் உள்ளது.

முதலாளி இல்லாத நிர்வாகத்தின் அலட்சியபோக்கால் ரூ.750 கோடி மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் லாபநோக்கம் கருதாமல் சாக்கு போக்கு சொல்லாமல் கேட் கீப்பர்கள் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் போக்கி தினசரி ரயிலை இயக்க வேண்டும் என்றார். அக்போபர் 1ம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் மீண்டும் ரயில் இயக்கப்படும் என்று நேற்று முன்தினம் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்ட டெமு ரயில் மதியம் 12.45 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வந்தது. மற்றொரு இன்ஜினை இழுத்து சென்றதுபட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரை அகல ரயில் பாதை பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஜல்லி மற்றும் தளவாட பொருட்களை ஏற்றி செல்லும் ரயில் இன்ஜினும் 6ம் தேதி முதல் அதிராம்பட்டினம் பகுதிகளில் பணியில் இருந்தது. தற்போது மீண்டும் தளவாட பொருட்களை ஏற்றுவதற்காக காரைக்குடிக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்த ரயில் இன்ஜினும் கேட் கீப்பர் பற்றாக்குறை மற்றும் டீசல் சிக்கனத்தால் காரைக்குடிக்கு  செல்லாமல் இப்குதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு சென்ற டெமு ரயில் தளவாட பொருட்கள் ஏற்றி செல்லும் ரயில் இன்ஜினையும் இழுத்து சென்றது.

Related Stories: