சேலம் பச்சப்பட்டியில் செல்வகணபதி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

சேலம், செப்.12: சேலம் பச்சப்பட்டியில் செல்வகணபதி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடக்கிறது. சேலம் டவுன், பச்சப்பட்டியில் செல்வகணபதி விநாயகர் கோயில், மகா கும்பாபிஷேக விழா இன்று (12ம் தேதி) காலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், சர்வதேவதா ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தீபாராதனை ஆகியவை நடந்தது. அதை தொடர்ந்து, விக்னேஷ்வர பூஜை, கலசபூஜை, பூர்ணாகுதி, கணபதி ஹோமம், தீபாராதனையும் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செல்வ கணபதி நண்பர்கள் குழுவினர் சார்பில், 10ம் ஆண்டு வெற்றி பயணமாக கடந்த 3 ஆண்டுகளாக இலவச திருமண உதவித்தொகை, இறந்தவர்களின் இறுதி சடங்கு செய்ய நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திருமண உதவி ₹2,500 மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செல்வகணபதி நண்பர்கள் குழுவினர் மற்றும் நிர்வாகிகள் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: