விழுப்புரத்தில் நடக்கவிருக்கும் முப்பெரும் விழாவிற்கு திரளாக சென்று பங்கேற்பு குடந்தை மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

கும்பகோணம், செப்.12: விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவிற்கு திரளாக சென்று கலந்து கொள்வது என தாராசுரத்தில்  நடந்த குடந்தை மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம் திமுக மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் தாராசுரத்தில்   ஒன்றிய அவைத்தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.  மேற்கு ஒன்றிய செயலாளா் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள், சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கழக தலைவராக  மு.க.ஸ்டாலினை ஏகமனதாக தோ்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவிப்பது. நாளை (13ம் தேதி)  மறைந்த முன்னாள் அமைச்சா் கோ.சி.மணி பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது, 15ம் தேதி  அண்ணா பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது, விழுப்புரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக சென்று கலந்து கொள்வது, 18ம் தேதி  மாவட்ட செயலாளா் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertising
Advertising

இதில் ஒன்றிய துணைச்செயலாளா–்கள் செல்வராஜ், பாஸ்கா்,  முத்துசெல்வன், ரேவதி, பேரூர் கழக செயலாளா–்கள் சாகுல் ஹமீது, பாலசுப்ரமணியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் செந்தில் குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கண்ணகி, ஒன்றிய பிரதிநிதிகள் ஸ்ரீகண்டன், அசோகன், ராஜசேகா் மற்றும் ஊராட்சி கழக செயலாளா–்கள், ஒன்றிய சார்பு அணி அமைப்பாளா–்கள் கலந்து கொண்டனா்.

Related Stories: