பெரியார் தொழிற்சங்க பேரவை துவக்க விழா

ஈரோடு, ஆக. 14:  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தந்தை பெரியார் தொழிற்சங்க பேரவை துவக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் போக்குவரத்து பணிமனை அருகே நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தொழிற்சங்க பேரவை தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய சங்கத்தை துவக்கி வைத்தனர்.

பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து துறையை உருவாக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் அனைத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், பட்டதாரி கண்டக்டர்களுக்கு 6 ஆண்டுகள் பணி முடித்தவுடன் 25 சதவீத செக்கிங் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

இதேபோல கோவை கோட்டத்தில் பட்டதாரி டிரைவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், பணி சுழற்சி முறையை கோவை கோட்டத்திற்குட்பட்ட அனைத்து கிளைகளிலும் கொண்டு வர வேண்டும், 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும், என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன், மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் விஸ்வநாதன், பொதுச்செயலாளர் வீரதமிழன், வழக்கறிஞர் பாலமுருகன், மாவட்ட துணை செயலாளர்கள் செம்பான், பூங்காசபி, அழகுமணி, டாக்டர் தனபால், திராவிடர் விடுதலை கழக மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: