கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களின் பதிவுகளை ராஜஸ்தான் காவல்துறையை போல் பின்பற்றும் பேரணாம்பட்டு போலீசார்

வேலூர், ஆக.9: கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களின் பதிவுகளை ராஜஸ்தான் காவல்துறையை போல் பேரணாம்பட்டு காவல்நிலைய போலீசார் பின்பற்றுகின்றனர்.  நாடு முழுவதும் 15,000 காவல் நிலையங்களுக்கும் மேல் உள்ளது. இந்த காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை என்று ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் ஒவ்வொரு விதமாக ஆவணங்கள் கையாளப்படுகிறது.இதில் ராஜஸ்தான் மாநில காவல்துறை கையாளும் ஆவணங்கள் விரிவாக இருப்பதால், தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட அனைத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், காவல்நிலையங்களில் பயன்படுத்தும் கையேடுகள் போன்றவற்றை, ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் பயன்படுத்தும் ஆவணங்களை போல் பயன்படுத்த தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் முதல்கட்டமாக ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் இந்த முறை பின்பற்ற தொடங்கியுள்ளனர். அதேபோல் வேலூர் மாவட்டத்தில் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் பேரணாம்பட்டு காவல்நிலையத்தில் ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் கையாளும் ஆவணங்கள், வழக்கு பதிவு ஆவணங்கள் போல் பின்பற்றத்தொடங்கியுள்ளனர் என்று போலீஸ் உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: