பள்ளிப்பட்டு பகுதியில் பொதுமக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதி மக்களின்  நீண்ட கால கோரிக்கையை ஏற்று 108 ஆம்புலன்ஸ் சேவையை எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் வாகன வசதி இல்லாமல், நோயாளிகளுக்கு அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்ல அவதிப்பட்டு வந்தனர்.  மேலும், உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் பலர் உயிரிழந்தனர். இதனால், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.  இந்நிலையில், திருத்தணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எஸ்.சந்திரன் எம்எல்ஏ,  மாவட்ட கலெக்டரை அணுகி உடனடியாக ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் 108 வாகன சேவையை எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார்.  இதன் மூலம் பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதி மக்கள், கர்ப்பிணிகள் அவசர சிகிச்சை பெற வசதி ஏற்பத்தப்பட்டுள்ளது என பொதுமக்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.  நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் ஜோதிகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஜி.ரவீந்திரா, சி.ஜெ.சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனஞ்செழியன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்….

The post பள்ளிப்பட்டு பகுதியில் பொதுமக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: