கடம்பன்குடியில் மக்கள் நேர்காணல் முகாம்

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 21: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா கடம்பன்குடி கிராமத்தில் தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நேற்று நடந்தது.முகாமில் பூதலூர் தாசில்தார் இளங்கோ வரவேற்றார். சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அழகிரிசாமி, கலால் உதவி ஆணையர் தவச்செல்வன், ஊராட்சி முன்னாள் தலைவர் ரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஆர்ஓ சக்திவேல் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, 106 பயனாளிகளுக்கு ரூ.11.56 லட்சம் நலஉதவி வழங்கி பேசியதாவது:அரசின் சார்பில் தொலைதூர கிராமங்களை தேர்ந்தெடுத்து மக்கள் நேர்காணல் முகாம்கள் நடத்தப்படுகிறது. மக்கள் அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கு 13 அலுவலர்கள் தங்கள் துறைகளை சார்ந்த திட்டங்கள் குறித்த விபரங்களை தெரிவித்தனர். அரசு பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காக பலதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதுபோல கூட்டுப்பண்ணை திட்டம் என பலரும் பயன்பெறும் வகையில் அனைத்து திட்டங்களையும் மக்கள் முழுமையாக பயன்படுத்திகொள்ள வேண்டும். மேலும் உழவன் செயலி என்ற ஆப்-ஐ பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். பூதலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Related Stories: