இங்கிலாந்தில் நாளை முதல் ‘ஸ்பிரிங் பூஸ்டர்’ தடுப்பூசி

லண்டன்: இங்கிலாந்தில்75 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் வசந்த கால பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் தேசிய  சுகாதார சேவை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘75வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு திங்கள் முதல் (நாளை) ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி போடுவது தொடங்குகின்றது.   

தேசிய சுகாதார சேவை குழுக்கள் நேரடியாக சென்று பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவார்கள். ஏப்ரல் 17ம் தேதி முதல் பதிவு செய்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்படும். 50 லட்சம் பேர் ஸ்பிரிங் பூஸ்ட்ர் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories: