போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா

வாஷிங்டன்: உலக வங்கித் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார். உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பாஸ், வரும் ஜூன் மாதம் 30ம் தேதி பதவி விலக உள்ளார். இதனால் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.   இதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. பங்காவை எதிர்த்து வேறு எந்த நாடும் தங்கள் பிரதிநிதிகளை நிறுத்தவில்லை. எனவே, அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார். இவர் 5 ஆண்டு காலத்துக்கு உலக வங்கியின் தலைவராக பதவி வகிக்க முடியும்.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை பூர்வீகமாகக் கொண்ட அஜய் பங்கா, தற்போது ஜெனரல் அட்லாண்டிக் என்னும் பங்கு நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.  அஜய் பங்காவின் தேர்வு, உலக வங்கியின் இயக்குனர் குழுவால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories: