கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புன்னமடை காயல் கரையோரத்தில் பிரமாண்ட ஏற்பாடு

கேரளா: கேரளாவில் நாளை வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வைக்கம் நூற்றாண்டு விழா நாளை கேரள அரசு சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கேரள முதலமைச்சருடன் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். புன்னமடை காயல் கரையோரத்தில் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சார்பில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். இரு மாநில முதலமைச்சர்களும் விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. சமூக நீதிக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் கேரளாவில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டங்களில் ஒன்று இந்த வைக்கம் போராட்டம் தந்தை பெரியார் முன்னின்று இந்த போராட்டத்தை கடந்த 1924ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி தொடங்கி இருந்தார். இதற்காக அவர் இரண்டு முறை கடும் காவல் சிறைத்தண்டனையும் அனுபவித்திருந்தார்.

Related Stories: