ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!

வாஷிங்டன் : ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேட்டோ நாடுகளின் வரிசையில் சேர விரும்பிய உக்ரைன் மீது ஓராண்டுக்கும் மேலாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்குவதற்கு ஆரம்பம் முதலே ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபிடன் உக்ரைனுக்கு சென்றதும் ரஷ்யாவை எரிச்சலூட்டியது.

இந்த நிலையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற பத்திரிகையாளரை கைது செய்ததாக ரஷ்யா கூறியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, தங்கள் நாட்டினர் ரஷ்யாவில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலின்கன், ரஷ்யாவில் வசிக்கும் அல்லது அந்த நாட்டிற்கு பயனளிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். மேலும் ரஷ்யாவுக்கு  மேற்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories: