ஜெகன்மூர்த்தி திருப்பி, திருப்பி சொன்னதால் நானும் முயற்சி, முயற்சி செய்து பார்க்கிறேன்: அமைச்சர் துரைமுருகன் பதிலால் சிரிப்பலை

சென்னை: கே.வி. குப்பம் எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) :‘மோர்தானா அணையிலிருந்து வரும் நீர் வீணாக பாலாற்றில் கலந்து கடலுக்குத்தான் செல்கிறது. ஆகவே, அந்நீரை பாக்கம் ஏரிக்கு திருப்பிவிட்டு குடியாத்தம் நகருக்கு குடிநீருக்காக அந்நீரை திருப்ப வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘ பாக்கம் ஏரியின் கொள்ளளவு மிகவும் குறைவாக இருக்கிறது. தண்ணீர் ஏரிக்கு போகிறதோ, இல்லையோ, ஆனால் என்னுடைய நீண்ட நாள் நண்பர் ஜெகன் மூர்த்தி திருப்பி, திருப்பி சொன்னதால் நானும் முயற்சி, முயற்சி செய்து பார்த்து முடிந்த அளவிற்கு செய்கிறேன். அமைச்சரின் இந்த பதிலால் பேரவை சிரிப்பில் மூழ்கியது.

Related Stories: