மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி கலைப்பு

பாங்காக்:  மியான்மரில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, ஆங் சான் சூகியின் தலைமையிலான அரசை கவிழ்த்து விட்டு கடந்தாண்டு பிப்ர வரியில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.  இதையடுத்து, சூகி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர் மீது பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அங்கு விரைவில் பொதுதேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, கட்சிகள் தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.இந்நிலையில், அந்நாட்டின் ராணுவ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி அதன் பதிவை புதுபிக்க தவறியதால், அக்கட்சி கலைக்கப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது. மியான்மரில் ஆங்சான் சூகியின் கட்சியுடன் சேர்த்து மொத்தம் 40 அரசியல் கட்சிகளை ராணுவம் கலைத்துள்ளது.

Related Stories: