கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்

டொரந்தோ: கனடாவில் உள்ள பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தில் சைமன் பிராசர் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டு இருந்த மகாத்மா காந்தி சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு இந்திய தூதரகம் தனது டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கனடா அதிகாரிகள் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் மற்றும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 23ம் தேதி கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் உள்ள சிட்டி ஹால் அருகே இருந்த மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: