அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி

நாஷ்வில்லே: அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் தனியார்  பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நேற்று முன்தினம்  நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

Related Stories: