பா.ஜவுக்கு எதிராக அணி திரளும் 19 கட்சிகள்

புதுடெல்லி: ராகுல் எம்பி பதவி பறிக்கப்பட்ட பிறகு பா.ஜவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் 19 கட்சிகள் அணி திரண்டு உள்ளன. நாட்டில் பா.ஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டுவதில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த சிக்கல் ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்ட பிறகு தகர்ந்து விட்டது. காங்கிரஸ் அணியை தவிர்க்கும் ஆம்ஆத்மி, திரிணாமுல், பிஆர்எஸ் கட்சிகளும் இப்போது காங்கிரஸ் தலைமையில் திரண்டுள்ளன. டெல்லியில் திங்கட்கிழமை இரவு காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் 18 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. சாவர்க்கர் விவகாரத்தில் சிவசேனா மட்டும் பங்கேற்கவில்லை. எம்பி சஞ்சய் ராவத்துடன் ராகுல் பேசிய பிறகு நேற்று காலை அவர்களும் பங்கேற்றனர். ஏப்ரல் முதல் அவர்கள் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளனர்.

Related Stories: