விஜய்யா உங்கள் தலைவர்? தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கூறுகையில்,‘‘திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இது முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது என்பது இந்து விரோத செயலாகும். அதேபோல் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் வழங்கிய இந்தியா கூட்டணி முழுவதும் இந்து விரோத கூட்டணி ஆகும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நடிகர் விஜய் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பியூஷ் கோயல், தமிழ்நாட்டில் த.வெ.க தலைவர் விஜயை ஒரு தீவிர அரசியல் தலைவராக மக்கள் ஏற்பதற்கு முன்பாக அல்லது மக்கள் அவரை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கு முன்பாக இருமுறை சிந்திக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: