ஸ்பெயின் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீ: 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு ஸ்பெயினில் உள்ள வாலன்சியா மற்றும் அரகோன் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால், வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காஸ்டெல்லோன் பகுதிக்குச் சென்ற ஸ்பெயின் நாட்டு பிரதமர் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ பற்றி எரிவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: