லெபனானில் அரிதான மான்களை நூற்றுக்கணக்கில் வளர்க்கும் நபர்

லெபனான்: லெபனான் நாட்டின் ஆனா மாகாணத்தில் நூற்றுக்கணக்கான மான்களை தனது மேய்ச்சல் நிலத்தில் ஒருவர் வளர்த்து வருகிறார். லெபனானில்வேட்டையாடுவதை தொழிலாக கொண்ட 64 வயதான நாசிஃப் லெபனான் நாட்டில் அரிதாக உள்ள மான் இனத்தின் எண்ணிக்கையை பெருக்கும் நோக்கில் கடந்த 2000 ஆண்டில் வெளிநாட்டில் இருந்து மான்களை கொண்டுவந்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

தற்போது நூற்று கணக்கில் பலுகி, பெருகி உள்ள மான்கள் 10 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தில் சுதந்தரமாக சுற்றி திரிகின்றன. பொருளாதார நிலை, பசி மற்றும் நிலையற்ற பாதுகாப்பு காரணமாக, பாதுகாப்பற்ற பகுதிகளில் மான்களை விடுவித்தால், அவற்றை வேட்டைக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் கூறினார். மேலும் 6 வகை மான்களுக்கு நாள் ஒன்றிற்கு அரை டன் சோளத்தை உணவாக அளிக்கும் நாசிஃப் விரைவில் படிப்படியாக வட பகுதியில் மான்களை விட திட்டமிட்டுள்ளார்.

Related Stories: