தெலங்கானா முதல்வர் மகள் கவிதா கைதுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: டெல்லி புதிய கலால் கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை 2 முறை விசாரணை நடத்தி உள்ளது. இந்தவழக்கில் தன்னை கைது செய்ய தடை விதிக்க கேட்டு கவிதா சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெல்லா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது கவிதா மனுவுக்கு நிவாரணம் அளிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் மனுவை 3 வாரங்கள் கழித்து விசாரிப்பதாக ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Related Stories: